Bastille Day - தேசிய தினம்! - ஒரு சுருக்கமான வரலாறு!!

14 ஆடி 2017 வெள்ளி 10:30 | பார்வைகள் : 23096
இன்று, ஜூலை 14, பிரான்சின் தேசிய தினமாமும். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் இராணுவ அணிவகுப்பு, இராணுவ விமான சாகசங்கள், வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது பிரான்சின் 227 வது தேசிய தினமாகும். பிரெஞ்சு புரட்சியின் போது, மிக முக்கியமாக இருந்தது Bastille நகரில் மேற்கொண்ட முற்றுகையாகும். இந்த முற்றுகை ஜுலை 14, 1789 ஆம் ஆண்டு இடம்பெற்றது. பின்னர் இந்த நிகழ்வை அதே நாளில் மறு வருடம் சில பகுதி மக்களால் சந்தோசமாக கொண்டாடப்பட்டது. Bastille Day என இந்த தினம் குறிப்பிடப்பட்டது.
பின்னர், இந்த நிகழ்வு, நாடு முழுவதும் கொண்டாடப்பட, இதுவே தேசிய தினம் என்றானது. அதன் பின்னர் இராணுவ அணிவகுப்பும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளும் அன்றைய நாளில் அரங்கேற்றப்பட்டன.
இந்த தேசிய நாள் நிகழ்வுகளின் போது பலத்த பாதுகாப்புக்கள் பலப்படிருத்தப்பட்டிருந்தாலும், பல சட்டவிரோத நிகழ்வுகளும் இந்த நாளில் இடம்பெற்றுத்தான் உள்ளன.
2009 ஆம் ஆண்டு, தேசிய தின நிகழ்வின் போது, இளைஞர்கள் சிலர் சேர்ந்து, 300க்கும் மேற்பட்ட மகிழுந்துகளுக்கு தீ மூட்டினர். இது தவிர, கடந்த வருடம், மொத்த நாட்டையே உலுக்கிப்போட்ட நிகழ்வாக நீஸ் நகரில் பயங்கரவாதி Mohamed Lahouaiej-Bouhlel கூட்டத்துக்குள் கனரக வாகனம் ஒன்றை செலுத்தியதில், 86 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளபோதும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 என்பது, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிற ஒரு நாளாக திகழ்ந்து வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1