Philippe Croizon - கை கால்கள் இல்லாமல் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்தவர்!!
7 ஆவணி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 22079
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், சாதிப்பதற்கு உடல் ஊனம் ஒரு தடை அல்ல என உலகுக்கு காட்டிய.. தன்னம்பிக்கையின் சிகரம்.. Philippe Croizon குறித்து பார்க்கலாம்!!
சுருக்கமாக... இவர் 1968 ஆம் ஆண்டு பிறந்தார். கை கால்கள் அனைத்தும் மிக சீராக கொண்டு.. நேர்மையாகவும்.. கடுமையான உழைப்பாளியாகவும் இருந்தார். தன் இளமைக்காலத்தில் இரும்புகளை இணைத்து ஒட்டும் 'வெல்டிங்' வேலை செய்துவந்தார். தன் 26 வது வயதில் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் போது.. 1994 ஆம் ஆண்டு, அந்த சம்பவம் இடம்பெற்றது.
தன்னுடைய வீட்டில், தொலைக்காட்சியின் 'அன்ரனா' ஒன்றை நிறுவுவதற்கான இரும்பிலானான சட்டம் ஒன்றை வீட்டின் கூரையோடு ஒட்டிக்கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக அதிகளவு வோல்டேஜ் மின்சாரம் அவர் உடம்பில் பாய்ந்தது. கண நொடியில் இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தினால் Philippe Croizon தூக்கி எறியப்பட்டார். 30 நிமிடங்கள் ஆனது... அண்டை வீட்டினர் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு.
சோதனையிட்ட மருத்துவர்கள் இடது மற்றும் வலது கைகளை நீக்கவேண்டும் என தெரிவித்தனர். வாழ்வதற்கு மிகவும் சவால் என்ற போதும் அதற்கு சம்மதிக்க.., இரண்டு கைகளும் முழங்கைகளோடு அகற்றப்பட்டது. சில நாட்களின் பின்னர், இடது காலை அகற்றவேண்டும்... இல்லையென்றால் உயிர்பிழைப்பது கஷ்ட்டமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால்... சோகமாக, அவரது இரண்டு கால்களையும் அகற்றவேண்டிய தேவையில் கொண்டுவந்து நிறுத்தியது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் போது, நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்தார். அப்போது தொலைக்காட்சியில் விளையாட்டுப்போட்டிகளை விரும்பி பார்வையிடுவார். அதன் போது ஒரு பெண் அசாத்தியமாக நீச்சல் இடுவதை பார்த்து பிரமித்து போனார். இரண்டு கைகள் இரண்டு கால்கள் இல்லாதபோதும்.. தன்னால் இது போல் நீந்த முடியும் என நம்பினார்...
ஒரு வரலாறு உருவானது.
(நாளை..)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan