சிறையில் 19 வயது கைதி இறப்பு, இது ஒரு கொலையா?
1 பங்குனி 2025 சனி 07:57 | பார்வைகள் : 12240
பிரான்சில் சிறைச்சாலைகளில் நடக்கும் அசம்பாவிதங்கள் அதிகரித்து வருகிறது, சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களில் கையடக்க தொலைபேசி உட்பட பல பொருட்கள் சாதரணமாக புழக்கத்தில் இருந்த வருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் சிறைச்சாலையில் 19 வயது கைதி ஒருவரின் மரணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை அடர்த்தியாக்கியுள்ளது.
Bouches-du-Rhône நகரில் உள்ள Aix-Luynes சிறைச்சாலையில் கடந்த புதன்கிழமை 26/02 அன்று 19 வயதுடைய விசாரணை கைதியொருவர் இறந்துள்ளார் என Aix-en-Provence வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலையில் உள்ள அவதானிப்பு கருவிகள் மூலம், இறந்து போன விசாரணை கைதி, அங்கு ஏற்கனவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,25, 26 வயதுள்ள கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என அவதானிக்கப்பட்டுள்ளது.
இறந்து போன கைதி தங்களின் சகாவை வெளியே வைத்து படுகொலை செய்ய முற்பட்டுள்ளார் என சிறையில் உள்ள கைதிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 24/02 அன்று சிறையில் தாக்கப்பட்ட குறித்த நபர் பின்னர் வடக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கோமா நிலையில் இருந்த பின்னரே இறந்துள்ளார் என செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan