உங்களை Track செய்யும் WhatsApp - உடனடியாக தவிர்ப்பது எப்படி….?
27 மாசி 2025 வியாழன் 11:34 | பார்வைகள் : 3994
பொதுவாக மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசுவதற்கு மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் உங்கள் இருப்பிடத்தை அழைப்புகள் மூலமாகவும் கண்காணிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில், WhatsApp அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது.
WhatsApp அழைப்புகளின் போது உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும்.
இதைத் தவிர்க்க, நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒரு சிறப்பு அமைப்பை இயக்க வேண்டும். அது என்ன என்று குறித்து பார்க்கலாம்.
ஒரு WhatsApp அழைப்பின் போது, உங்கள் IP முகவரி அழைப்பாளருடன் பகிரப்படலாம். உங்கள் IP முகவரியைப் பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.
இந்த சிக்கலைச் சமாளிக்க, WhatsApp "Protect IP address in calls" என்ற அம்சத்தை வழங்கியுள்ளது.
இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், உங்கள் IP முகவரி உங்களை அழைப்பவருக்கு மறைக்கப்படும், இதனால் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பது கடினமாகும்.
இந்த அம்சம் WhatsApp-இல் வரும் அழைப்புகளை நேரடியாக வாட்ஸ்அப் சேவையகங்கள் வழியாக வழிநடத்துகிறது, இதனால் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பது கடினம்.
உங்கள் தொலைபேசியில் WhatsApp திறந்து Settings செல்லவும்.
இதற்குப் பிறகு, Privacy option தட்டவும்.
பின்னர் திரைக்கு கீழே சென்று Advanced option தட்டவும்.
இங்கே Protect IP address in calls அம்சத்தை தட்டவும்.
இந்த அமைப்பை இயக்குவதன் மூலம், உங்கள் Privacy பாதுகாக்கப்படும், மேலும் உங்கள் இருப்பிடத்தை யாரும் கண்காணிக்க முடியாது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan