பிரான்சின் ஆங்கிலச் சாலை!!
1 புரட்டாசி 2017 வெள்ளி 10:30 | பார்வைகள் : 21116
பிரான்சின் நெடுஞ்சாலைகள் உலகப்பிரசித்தம். நாட்டின் பெரும்பாகங்கள் அனைத்தை நோக்கியும் நீளும் சாலைகள் பல பெயர்களையும், பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் ஆங்கில நெடுஞ்சாலை குறித்து பார்க்கலாம்!
395 கிலோமீட்டர்கள் நீளமுள்ள A26 நெடுஞ்சாலையே ஆங்கில நெடுஞ்சாலை (Autoroute des Anglais) என அழைக்கப்படுகிறது. காரணம் மிகச்சிறியது. இலண்டனில் இருந்து வரும் வாகனங்கள், பிரான்சுக்குள் நுழைந்ததும் சந்திக்கும் முதல் நெடுஞ்சாலை இது தான்.
இந்த வீதியில் பிரான்சின் Troyes நகரில் இருந்து, கலே துறைமுகம் நோக்கி செல்கிறது. பரிசில் இருந்து மகிழுந்தில் இலண்டன் செல்லவேண்டும் என்றால்... பல்வேறு சாலைகளை கடந்து இறுதியில் நீங்கள் A26 சாலையில் பயணிக்கவேண்டும்.
2025 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நெடுஞ்சாலை Yonne மாவட்டத்தின் Auxerre நகர் வரை விஸ்தரிக்கப்பட உள்ளதாம். அதற்கான திட்டமிடல்கள் ஆரம்பித்து துரிதகதியில் இடம்பெற்று வருகிறது.
இந்த வீதியில் செல்லும் வாகங்கள் அனைத்தும் பிரித்தானியாவை நோக்கி செல்வதால்.. இதற்கு Autoroute des Anglais என பெயர் வந்தது. கலே பகுதியில் வசிக்கும் அகதிகள் பலர்... வாகனத்துக்கு குறுக்கே கட்டையை போட்டு தடுப்பதாக செய்திகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆம்.. அது இந்த சாலை தான்!!
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan