Dunkerque வெளியேற்றம்! - ஒரு தோல்வியின் கதை!!
7 புரட்டாசி 2017 வியாழன் 15:30 | பார்வைகள் : 21836
அமெரிக்க திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் எடுத்திருந்த Dunkirk திரைப்படத்தில் வரலாற்றைச் சிதைக்காமல் பல கற்பனைகளை கலந்து உருவாக்கியிருந்தார். ஆனால் உண்மை வரலாறு திரைப்படத்தை விடவும் வலி மிக்கது!
பிரான்சின் எல்லை நகரமான Dunkerque இல் இரண்டாம் உலகப்போர் நேரத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தான் 'Dunkerque வெளியேற்றம்!' இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கை ஓங்கியிருந்த காலம் அது. நாசி படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காவு வாங்கப்பட்டனர்.
Dunkerque நகரில் பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய துருப்புக்கள் (இராணுவ சிப்பாய்கள்) சுற்றி வளைக்கப்பட்டனர். ஜெர்மனி படையினர் மிக மூர்க்கத்தனமானவர்கள். பல இலட்சம் படைகள் ஒரு நகருக்குள் மாட்டிக்கொண்டுவிட... நான்கு திசைகளிலும் நாசி படையினர் நெருங்கிக்கொண்டிருந்தனர்.
சுற்றிவளைக்கப்பட்ட வீரர்களுக்கு எதிர்காலம் இருண்டுபோனது. தம்மை காப்பாற்ற தேவ தூதன் தான் வரவேண்டும் என படையினர் நம்பிக்கை இழந்து காத்திருக்க... அத்தனை இலட்சம் வீரர்களை ஒரு சேர காவு கொடுத்தல் என்பது எத்தனை கொடூரம்..??
வழி வந்தது.. பிரித்தானிய பிரதமர் வின்சண்ட் சர்ச்சில் ஒரு வீர உரை ஆற்றினார். "ஒரு மகத்தான இராணுவ பேரழிவு!' என குறிப்பிட்டார். மறுபக்கம் அடோல்ப் ஹிட்லரின் கட்டளையின் படி Dunkerque துறைமுகம் ஜெர்மனிய படையினர் கட்டுப்பாட்டில் வந்து, மூடப்பட்டது.
அந்த அதிசயம் அப்போது நடந்தது... பல பொதுமக்கள் பல படகுகளில் Dunkerqueஐ முற்றுகையிட்டனர். உயிர் காக்கும் படகுகள்.. சிறு சிறு படகுகள்.. பாய்மர கப்பல்கள் என கடலில் பயணிக்கக்கூடிய அத்தனையையும் எடுத்துக்கொண்டு, மக்கள் Dunkerqueகு வந்தனர்.
மே மாதம் 26 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு.. முதல் நாள்... இராணுவ வீரர்களை படகுகளில் பத்திரமாக அழைத்துச்செல்கிறார்கள்.. முதன் நாளில் மாத்திரம் 7,669 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரண்டாம் நாள்.. மூன்றாம் நாள்... என தொடர்ச்சியாக எட்டு நாட்கள் இந்த வெளியேற்றம் இடம்பெற்றது... ஜெர்மனியினர் யுத்தத்தை நிறுத்திவிட்டு... 'எப்படி பயந்து ஓடுகிறார்கள் பார்.. எலிகள் போல்...!' என சிரித்துக்கொண்டனர்.
பலத்த அவமானம்.. உலக மகா தோல்வி.. இருந்த போதும் தொடர்ச்சியாக வெளியேற்றம் இடம்பெற்றது.. எட்டாம் நாள் முடிவில்... ஜூன் 4 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு.. மொத்தமாக 338,226 வீரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
பிரித்தானியாவின் டோவர் (Dover) பகுதிக்கு வெறுமனே உயிரை மாத்திரம் மிச்சம் வைத்துக்கொண்டு வந்து சேர்ந்தனர் வீரர்கள்!!
ஆனால் இந்த சம்பவம் வரலாற்றில் எங்கேயும் 'கோழைத்தனம்' என பதிவாகவில்லை. மேற்படி வரலாற்றை தான் கிறிஸ்டோபர் நோலன் கற்பனை கலந்து பிரம்மாண்டமாக 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கப்பலை எல்லாம் உடைத்து தகர்த்து திரையில் சொல்லியிருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan