'டிராகன்' படத்தை விமர்சனம் செய்த சிம்பு.. என்ன சொல்லியிருக்கார்?
20 மாசி 2025 வியாழன் 11:01 | பார்வைகள் : 6371
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்த நடிகர் சிம்பு, தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் பதிவு செய்திருக்கிறார். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிராகன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த படம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘டிராகன்’ படத்தை பார்த்த நடிகர் சிம்பு, தனது சமூக வலைத்தளத்தில் "பிளாக் பஸ்டர்" என்று பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, படத்திற்குப் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த சிம்புவுக்கு, படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
சிம்புவின் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார். இந்த நிலையில், அவரிடம் இருந்து வந்த பாசிட்டிவ் விமர்சனம், ‘டிராகன்’ படத்திற்கு பெரும் வரவேற்பாக பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan