பரிஸ் மக்கள் உணவை வீணடிக்கிறார்களா?!
17 ஐப்பசி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 23955
சர்வதேச உணவு தினம் அண்மையில், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல அமைப்பினர் உணவை வீணடிக்காதீர்கள் என கோஷங்கள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர். சரி.. பரிஸ் மக்கள் உணவை வீண்டிக்கிறார்களா..??
மோசமாக... மிக மோசமாக... என்கிறது ஒரு அமைப்பு. குறிப்பாக, பிரான்சில் வேற எந்த நகரங்களிலும் இல்லாதவாறு பரிஸ் மக்கள் அதிகளவு உணவை வீண்டிக்கிறார்களாம். பரிசில் ஒவ்வொரு தனிநபரும் வருடத்துக்கு 26 கிலோ உணவை வீனடிக்கிறார்கள் என ஒரு கணக்கீடு சொல்கிறது. அதுவும் சாப்பிடும் நிலையில் உள்ள தரமான உணவுகளாம்.. பிரான்சின் ஏனைய நகரங்களோடு ஒப்பிட்டால், 3 தடவைகள் அதிகமாக உணவை வீண் செய்கிறார்கள் பரிஸ் மக்கள்.
சரி.. ஏன் உணவை வீணாக்குகிறார்கள்..??! சில நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்.. பரிஸ் மக்களுக்கு உணவகங்களில் உணவு உண்பது தான் பிடிக்கிறதாம். இதனால் வீட்டில் சமைத்த உணவை மறந்துவிடுகிறார்களாம். அட பாவமே..??
தவிர, பரிசில் ஒரு குடும்பம் சராசரியாக வருடத்துக்கு 400 யூரோக்கள் இதனால் இழக்கிறதாம். அதேவேளை, உணவகங்களில் சாப்பிட்டு மீதமான உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பழக்கம் வேறு பரிஸ் மக்களுக்கு இல்லையாம்....!!!
இதைப்பாருங்கள்.. கடந்த 2015 ஆம் ஆண்டு மாத்திரம் பரிஸ் மக்கள் 59,000 தொன்கள் எடையுள்ள உணவை வீணடித்திருக்கிறார்களாம்.!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan