எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் அமைப்புக்கு கெடு விதித்த டிரம்ப்!

11 மாசி 2025 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 7940
15 .02-2025 மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் நரகத்தை போன்ற மிகமோசமான நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் இஸ்ரேல் ஹமாசுடனான யுத்த நிறுத்தத்தை கைவிடவேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் யுத்தநிறுத்த விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகள் பரிமாற்றத்தை இடைநிறுத்தப்போவதாக எச்சரித்துள்ள நிலையிலேயே டிரம்ப் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
சனிக்கிழமை பகல் 12 மணிக்குள்அனைத்து பணயக்கைதிகளும் ஒப்படைக்கப்படாவிட்டால்,யுத்த நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு நரகம் போன்ற ஒரு நிலை உருவாகுவதற்கு இடமளியுங்கள் என தெரிவிப்பேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1