வதிவிட ஆவணமற்ற தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படுவர். Astrid Panosyan-Bouvet.

6 தை 2025 திங்கள் 11:44 | பார்வைகள் : 12154
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட குடியேற்றச் சட்டத்தின்படி, ஆவணமற்ற தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படுவர், தொழிலாளர் பற்றாக்குறை உள்ள துறைகளில் கடமையாற்றும் வதிவிட அனுமத்ப்பத்திர ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு வரும் பெப்ரவரி மாதக்கடைசியில் அறிவித்தல் வெளியாகும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கு பொறுப்பான அமைச்சர் Astrid Panosyan-Bouvet தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட சட்ட ஒழுங்கின்படி 2023ம் ஆண்டில் 34 724 ஆவணமற்ற தொழிலாளர்கள் முறைப்படுத்தப்பட்டனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமராக பதவியேற்ற மறுதினம் செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் François Bayrou "விரைவில் ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு தொழில்துறையை சார்ந்து அவர்களுக்கான முறைப்படுத்தல் படி ஆவணம் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1