உலகின் வயது மூத்த டோமிகோ இடூகா காலமானார்…
5 தை 2025 ஞாயிறு 13:32 | பார்வைகள் : 5618
ஜப்பானிய சூப்பர் சென்டீனரியன் டோமிகோ இடூகா தன்னுடைய 116வது வயதில் காலமானார்.
இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் உலகின் மூத்த நபராக அங்கீகரிக்கப்பட்ட டோமிகோ இடூகா(Tomiko Itooka) டிசம்பர் 29 அன்று தன்னுடைய 116 வயதில் காலமானார்.
ஜப்பான், ஹியோகோ மாகாணம், அஷியாவில் உள்ள வயதானோர் இல்லத்தில் அவர் தங்கியிருந்த நிலையில், அங்குள்ள ஊழியர்களால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்காக ஒரு தனிப்பட்ட இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
1908 ஆம் ஆண்டு ஒசாகாவில் பிறந்த இடூகா நீண்ட மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்தார்.
உயர்நிலைப் பள்ளியில் வலுவான கைப்பந்து வீராங்கனையாக இருந்த இடூகா பிரபலமாக 10,062 அடி உயரமுள்ள மவுண்ட் ஒன்டேக் என்ற மலையை இரண்டு முறை ஏறியவராவார்.
கடந்த ஆண்டு தனது 115 வயது பிறந்தநாளை பூக்கள், கேக் மற்றும் மேயரின் வாழ்த்து அட்டையுடன் கொண்டாடிய இடூகா, வாழைப்பழம் மற்றும் கல்பிஸ் என்ற பிரபலமான ஜப்பானிய தயிர் பானத்திற்கு விருப்பம் கொண்டவர் என்று அறியப்பட்டது.
உலகின் மூத்த நபராக தனது நிலை குறித்து தெரிவிக்கப்பட்டபோது, இடூகா எளிமையாக "நன்றி" என்று பதிலளித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan