மைக்ரோ அல்காக்கள் அல்லது நுண்பாசிகளுக்கு 'கண்கள்' உண்டு. பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள்.

28 மார்கழி 2024 சனி 08:45 | பார்வைகள் : 5745
பழுப்பு நிற நுண் பாசிகள் கடலுக்கு அடியில் படுத்திருந்தாலும் அவை பூமிக்கும், சுவாசிக்கும் உயிரினங்களுக்கும் பெரும் உதவியாகவே செயல்படுகிறது. கரியமில வாயுவை கட்டுப்படுத்தி, அவை பூமி வெப்பமடைதலில் இருந்து பாதுகாக்கிறது. என விஞ்ஞான உலகம் பெருமைப்படுகிறது.
அண்மையில் 'Centre national de la recherche scientifique' (CNRS) தேசிய ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட நீண்ட ஆராய்ச்சியின் முடிவில் 'microalgues' எனப்படும் நுண் பாசிகள் கடலின் ஆழத்தில் தங்கள் வழியைக் கண்டறியவும், ஒளியை புரிந்து கொள்ளவும் அவைகள் கண்களைப் பயன்படுத்துகின்றன என்பதை கண்டுபிடித்தனர்.
தேசிய ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர், விஞ்ஞானி Angela Falciatore தங்களின் ஆராட்சி பற்றிய தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவிக்கையில் "நுண்ணுயிரிகள் உண்மையில் அவை எங்குள்ளன என்பதை அறியும் திறன் கொண்டவை, நீர்வாழ் சூழலுக்கு குறிப்பிட்ட ஒளியின் மாறுபாடுகளை உணரக்கூடியவை, இடம் மாறும் திறமை கொண்ட 'microalgues' எனப்படும் நுண் பாசிகள் தங்களின் செங்குத்தான பயணத்தில் தங்களின் மூலக்கூறு கண்களைப் பயன்படுத்துகின்றன ' எனத் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1