Paristamil Navigation Paristamil advert login

கொங்கோவிலில் படகு கவிழ்ந்து விபத்து - 38 பேர் பலி

கொங்கோவிலில் படகு கவிழ்ந்து விபத்து - 38 பேர் பலி

24 மார்கழி 2024 செவ்வாய் 13:43 | பார்வைகள் : 5085


மத்திய ஆப்ரிக்க நாடான கொங்கோவில் உள்ள ஈக்குவடார் மாகாணத்தில் புசிரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலியாகியுள்ளதுடன்,

 100 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து ஏற்படும் வேளை குறித்த படகில் 150 க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர் எனவும், எடை தாங்க முடியாமல் குறித்த படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மாயமான நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்