அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்! அதிரடி உத்தரவால் பரபரப்பு
25 தை 2025 சனி 16:19 | பார்வைகள் : 8126
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகளில் உதவித் திட்ட நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் அதிரடி அறிவிப்பு, திட்டங்களை ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார்.
அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பல நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. அந்த வகையில் தற்போது மற்றொரு அதிரடி உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
அதாவது உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க உதவித் திட்டங்களுக்கான நிதியுதவியை அவர் நிறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் இந்த உத்தரவில் சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உதவி உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த உத்தரவை அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளில் அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சூடான், சிரியா உள்ளிட்ட போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில், பல லட்சம் மக்களுக்கு உணவு வழங்குவதிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan