ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக்கொலை...
23 தை 2025 வியாழன் 13:08 | பார்வைகள் : 11502
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, பிணைக் கைதிகள் இருதரப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹமாதி வசித்து வந்தார். மர்ம நபர்கள் சிலர் அவர் வீட்டின் முன்பு வந்து துப்பாக்கியால் சரமாரியாக அவரை நோக்கி சுட்டுள்ளனர்.
இதில் ஹமாதி மீது 6 குண்டுகள் பாய்ந்ததாகவும், இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு ஊடகங்களால் வெளியான செய்தியில், குடும்ப பிரச்சனைக் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஷேக் ஹமாதி, 1985ஆம் ஆண்டில் 153 பயணிகளுடன் ஏதென்ஸ் நோக்கி சென்ற விமானத்தை கடத்தி, அவர்களில் ஒரு அமெரிக்கனை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்காவின் FBI அமைப்பால் தேடப்பட்டு வந்த நபராக ஹமாதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan