இனவெறி தாக்குதலுக்கு இலக்காகும் உணவு டெலிவரி தொழிலாளிகள்.

22 தை 2025 புதன் 10:23 | பார்வைகள் : 9865
இன்று மனிதர்கள் இருந்த இடத்தில் இருந்தபடி தங்களின் உணவு வகைகளை, உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் அதிகரித்து உள்ளனர்.
UberEats, Delivero போன்ற செயலிகள் அவர்களை இயக்கும் இணையவழி இயங்குதளமாக இருக்கின்றது. மிகக்குறைந்த ஊதியம், மிகவும் கடுமையான வேலைகள், இதனால் பெரும்பாலான ஊழியர்கள் வெளிநாட்டவர்கள் ஆகவும் பிரான்ஸ் தேசத்திற்கு வருகை தந்து சில மாதங்கள் ஆனவர்களாகவும் இருக்கிறார்கள்.
மொழி, செல்லும் வழி இவை இரண்டுமே இவர்களுக்கு சிக்கலான ஒன்று. இந்த நிலையில் சூடான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது அவை குளிர்ந்து விடுகிறது குளிரான ஐஸ்கிரீம் போன்ற உணவு பதார்த்தங்களை எடுத்துச் செல்லும்போது அவை உருகி விடுகிறது இதனால் ஆத்திரமடையும் வாடிக்கையாளர்கள் அவர்கள் மீது இனவெறி தாக்குதல்களை மேற்கொள்வதோடு மிக அவமானகரமாகவும் தங்களை நடத்திக் கொள்ளுகிறார்கள் என அந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புகார் அளிக்க UberEats அல்லது Delivero போன்ற செயலிகளை நாடும் போது அவை சரியான முறையில் விடையளிப்பதில்லை, அதேபோன்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றாலும் அந்த புகார்கள் சரியான முறையில் பதிவு செய்யப்படுவதில்லை, இவர்களுக்கு ஏற்படும் தாக்குதல்களை முறையிடுவதற்கு இவர்களுக்கான தொழிற்சங்கங்களும் சரியான முறையில் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1