Auto Expo 2025: 6 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்
21 தை 2025 செவ்வாய் 08:04 | பார்வைகள் : 8267
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் Auto Expo 2025-ல் 6 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி காட்சிப்படுத்தியுள்ளது.
ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Sarla Aviation தனது prototype air taxi-யான Shunya-வை Bharat Mobility Global Expo. வில் வெளியிட்டது.
இந்த டாக்ஸி ஒரே நேரத்தில் 160 கி.மீ தூரம் வரை பறக்க முடியும், ஆனால் இது 20-30 கி.மீ குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
Shunya பறக்கும் டாக்ஸி மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்க முடியும் என்றும், வெறும் 20 நிமிடங்களில் பயணத்திற்கு தயாராகிவிடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பறக்கும் டாக்சிகள் நெரிசலான பகுதிகளில் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பைலட் உட்பட 7 பேர் அமர முடியும்.
2028-ஆம் ஆண்டில் பெங்களூருவில் இருந்து பறக்கும் டாக்ஸி சேவை தொடங்கப்படும் என நிறுவனத்தின் இணை நிறுவனர் சிவம் சவுகான் கூறியுள்ளார்.
இதையடுத்து மும்பை, டெல்லி, நொய்டா, புனே போன்ற நகரங்களுக்கு ஏர் டாக்ஸி சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஓலா-ஊபரின் பிரீமியம் டாக்ஸி சேவைக்கு இணையாக ஒரு பயணத்தின் விலையை Shunya பறக்கும் டாக்ஸியில் வைப்பதே திட்டம். பயணிகள் போக்குவரத்து தவிர, நகர்ப்புறங்களில் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய இலவச விமான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குவதாகவும் அவர் அறிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan