புகை மூட்டத்துக்குள் மறைந்த விமானங்கள்.. வடக்கு பரிசில் சம்பவம்!!

21 தை 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 9636
Doubs நகரில் இருந்து புறப்பட்டு Reims நகர் நோக்கி பயணித்த இரண்டு சிறிய விமானங்கள் பனிமூட்டத்துக்குள் காணாமல் போய் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறிய சுற்றுலா விமானங்களை இரு இளம் விமானிகள் ஓட்டிச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பிரெஞ்சு விமானப்படையைச் சேர்ந்த விமானிகள் பயிற்சி அளித்தனனர்.
இந்நிலையில், இளம் விமானிகள் இருவரும் பனிமூட்டத்துக்குள் புகுந்து காணாமல் போனதாகவும், சில நிமிடங்களுக்கு அவர்களது தொடர்புகள் இல்லாமல் போனதாகவும், பின்னர் அவர்களை Beauvais (Oise) நகரில் உள்ள பகுதி ஒன்றில் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்துக்கள் எதுவும் இல்லாமல் அவர்கள் விமானங்களை பாதுகாப்பாக தரை இறக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1