கார்ட்டூனில் வரும் Shinchan வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்த நபர்

20 தை 2025 திங்கள் 10:43 | பார்வைகள் : 2709
ரசிகர் ஒருவர் கார்ட்டூனில் வரும் Shinchan வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்துள்ளார்.
உண்மையான கார்ட்டூன் ஆர்வலர்களுக்கு, Shinchan என்பது வெறும் கார்ட்டூன் அல்ல அது ஒரு உணர்ச்சி. குழந்தைகளுக்கு ஏற்ற நகைச்சுவைத் தொடரானது Shinchan என்ற ஐந்து வயது குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை சார்ந்தது.
உலகம் முழுவதும் Shinchan கதாபாத்திரத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதில், சிவப்பு மற்றும் வெள்ளை செங்கற்களால் தனித்துவமாக கட்டப்பட்ட ஷின்னோசுகே நோஹாராவின் (ஷின்-சான்) வீட்டை அதன் ரசிகர்களுக்கு மறக்க முடியாது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் அந்த வீட்டை புதுப்பிக்க ரூ.3.5 கோடி செலவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணியை தொடங்கினார். பின்னர், ஓராண்டுக்கும் மேலாக ஷின்-சானின் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் சீனாவில் க்ரேயான் ஷின்-சானுக்கான பிரத்யேக உரிம முகவரைக் கண்டுபிடித்தார். பின்னர், வீட்டை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காகவும், அதிகாரப்பூர்வ உரிமைகளைப் பெறுவதற்காகவும் ஷாங்காய்க்கு ஐந்து முறை பயணங்களை மேற்கொண்டார்.
இந்த கனவை உயிர்ப்பிக்க ஷெனின் தாயார் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஏறக்குறைய இந்த வீடு 100 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. தற்போது இந்த வீடு ரசிகர்கள் மற்றும் காஸ்ப்ளேயர்களுக்கான புகைப்பட இடமாக மாறியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், ஃபுடாபா மழலையர் பள்ளியை உருவாக்குவதும், கசுகாபே நகரம் முழுவதையும் மீட்டுருவாக்கம் செய்வதையும் ஷென் தனது லட்சியமாக கொண்டுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1