பாரிய வறட்சியை எதிர்கொள்ளும் உலகம் - சுவிஸ் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
18 தை 2025 சனி 17:46 | பார்வைகள் : 4527
கடந்த 40 ஆண்டுகளாக, உலகின் பல பாகங்களில், பாரிய வறட்சிகள் அதிகரித்துவருவதாக சுவிஸ் ஆய்வொன்று தெரிவிக்கிறது.
1980க்கும் 2018க்கும் இடையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவு சராசரியாக ஆண்டொன்றிற்கு 50,000 சதுர மீற்றர்கள் என்கிறது அந்த ஆய்வு.
இந்த நிலப்பரப்பின் அளவு, மொத்த சுவிட்சர்லாந்தின் நிலப்பரப்பையும் விட அதிகமாகும்.
வனம், பனி மற்றும் நிலப்பரப்புக்கான சுவிஸ் ஃபெடரல் நிறுவனத்தின் ஆய்வமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த வறட்சிகளுக்குக் காரணம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு காரணம் என்கிறது அந்த ஆய்வு.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வால் மழை மற்றும் பனிப்பொழிவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், மற்றும் மண் மற்றும் தாவரங்களிலிருந்து நீராவியாதல் அதிகரிப்பது ஆகியவையே இந்த வறட்சிகளுக்கு காரணம் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் உலகில் உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமுள்ளதாகவும் ஆய்வாளர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan