விஷால் கௌதம் மேனன் படத்தில் நடிக்கிறாரா?
18 தை 2025 சனி 16:02 | பார்வைகள் : 9095
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மதகஜராஜா’ என்ற திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் பொங்கல் ரிலீசுக்கு வந்த மற்ற படங்களை வசூலை விட அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் விஷால் உள்பட ’மதகஜராஜா’ படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஏற்கனவே ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கப் போவதாக கூறியிருந்த விஷால் அதன் பின்னர் வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் ’மதகஜராஜா’ வெற்றியால் அவருக்கு படக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் அவற்றில் ஒன்று இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கௌதம் மேனன் தற்போது மம்முட்டி காளிதாஸ், ஜெயராமன் நடித்த 'டோமினி அண்ட் த லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கிய முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
+-
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan