Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்.. வரவேற்றுள்ள ஜனாதிபதி மக்ரோன்!!

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்.. வரவேற்றுள்ள ஜனாதிபதி மக்ரோன்!!

15 தை 2025 புதன் 20:59 | பார்வைகள் : 5712


பதினைந்து மாத தொடர் யுத்தத்தின் பின்னர், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

"ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும்.  பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.  காசான்கள் காப்பாற்றப்பட்டனர்.  அரசியல் தீர்வு வரவேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதினைந்து மாதங்களில் கிட்டத்தட்ட 47,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதை அடுத்து ஒருவார போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதனை உடனடியாக வரவேற்றுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், 15 மாதங்கள் நியாயப்படுத்த முடியாத சோதனை முடிவுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்