ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்த விளையாட்டு வீரர்!!
1 வைகாசி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 22143
காலில் சக்கரங்களை கட்டிக்கொண்டு சறுக்கி விளையாட்டும் விளையாட்டுக்கள் உலகம் முழுவதும் மிக பிரபலம். அதன் உச்சக்கட்டமாக ஒருவர் சாதனை படைத்தார். அதுவும் நமது ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்து...
சாகச விளையாட்டு பிரியர் Taig Khris ஒருதடவை ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்தார்.
2010 ஆம் ஆண்டின் ஒருநாளில், இந்த சாதனையை பரிஸ் மக்கள் பலர் கூடியிருக்க நிகழ்த்தினார். ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளம். கீழே பலாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க, சுற்றிலும் கமராக்கள் படமாக்க, மிக அபாயகரமான அந்த சாதனையை Taig Khris நிகழ்த்தினார்.
ரசிகர்கள் முழு எனர்ஜியுடன் கோஷமிட, அங்கிருந்து குதித்தார்.
12.5 மீட்டர்கள் உயரத்துக்கு எந்த பிடிமானமும் இல்லாமல் காற்றில் வந்து, பின்னர் சறுக்கு பலகையில் சக்கர காலணியை வைத்து சறுக்கிக்கொண்டே வந்து பஞ்சு மெத்தையில் வந்து நின்றார்.
ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்ப, எழுந்து வந்து அனைவருக்கும் கை குலுக்கினார்.
உலக சாதனை பதியப்பட்டது.
முன்னதாக, இந்த விளையாட்டில் உலக சாதனையாக 8.53 மீட்டர் உயரம் மாத்திரமே இருந்தது.
(விளையாட்டின் விதிப்படி, குதிக்கும் மொத்த தூரத்தில் பாதிக்கு மேல் கால்கள் ஊன்றி சறுக்கியிருக்கவேண்டும். இவரும் இதுபோன்றே குதித்து சாதனை படைத்தார்)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan