பாகிஸ்தானில் சர்வாதிகாரம் - இம்ரான் கான் குற்றச்சாட்டு
11 தை 2025 சனி 04:05 | பார்வைகள் : 4904
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு மத்தியில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2024 பெப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால் மெஜாரிட்டி பெறவில்லை. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
அவருடைய கட்சி தொண்டர்கள், தலைவர்கள் தொடர்ந்து போராடு வருகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானில் நிலவும் அரசியல் பதற்றத்தை குறைக்க இம்ரான் கான் கட்சியுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகார ஆட்சியை திணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகாரத்தை திணிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதில் இரண்டு வருடங்கள் ஏற்கனவே கடந்து போய்விட்டன. எங்களுக்கு எதிராக அடக்குமுறையை கையாளும் நீதிபதிகள் அல்லது போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்ற வெகுமதி வழங்கப்படுகிறது.
எனக்கு எதிராக சட்டவிரோத தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹமாயுன் திலாவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ராவல் பிண்டி மற்றும் சர்கோடா நீதிபதிகள் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதால், நீக்கப்பட்டுள்ள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் நாட்டின் தகுதியையும் சட்டத்தின் ஆட்சியையும் அழித்துவிட்டன என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan