கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா... கேலி செய்யும் எலான் மஸ்க்
7 தை 2025 செவ்வாய் 16:42 | பார்வைகள் : 11489
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, அவரைக் கேலி செய்யும் விதத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளரான எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை அளித்துள்ளார்.
அதிலிருந்தே உலக அரசியல்வாதியாகிவிட்டார் எலான் மஸ்க். ஆம், உலக நாடுகளின் அரசியலில் என்ன நடந்தாலும், அதை விமர்சிப்பதே இப்போது எலான் மஸ்குக்கு முக்கிய வேலையாகிவிட்டது.
இந்நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைக் கேலி செய்யும் வகையில், சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.
2025 அருமையாக காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், ட்ரம்ப் வெற்றிபெற்றுவிட்டார், ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டார், கெய்ர் ஸ்டார்மரைக் குறித்த உண்மை வெளிவந்துவிட்டது, சரியான நேரத்தில் மாபெரும் மனிதர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள், நமக்கு அவர்கள் எல்லாரும் தேவை என்று கூறி, உலக நிகழ்வுகள் பலவற்றை வரிசையாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ட்ரம்ப், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும் கேலி செய்துவரும் நிலையில், தற்போது எலான் மஸ்கும் தன் பங்குக்கு ட்ரூடோவை கேலி செய்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan