Aya Nakamura : ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வு பாடல் இணையத்தில் வெளியீடு!

29 கார்த்திகை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 9987
ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வின் போது பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura பாடிய பாடலை இணையத்தில் வெளியிடும் திட்டமொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பநாள் நிகழ்வில் தங்க நிற உடை அணிந்துகொண்டு Aya Nakamura வழங்கிய நடனத்துடன் கூடிய பாடல், ஏற்கனவே ஒளிப்பதிவு செய்து, நிகழ்வின் போது ஒளிபரப்பட்டது. பின்னர் அந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவியது.
இந்நிலையில், நேற்று நவம்பர் 28 வியாழக்கிழமை FRANCE 5 தொலைக்காட்சியின் C à vous நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடிய Aya Nakamura இடம், குறித்த காணொளியை உத்தியோகபூர்வமாக வெளியிடுவது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளிக்கையில், ’விரைவில்’ என பதிலளித்துள்ளார். ”அந்த பாடலை பாடுவது மிகவும் சிரமம். மிகவும் கஷ்டப்பட்டு அந்த பாடலை பாடியிருந்தேன். அது அதிகமாக பாராட்டப்பட்டிருந்தது. எனவே அதனை தாராளமாக வெளியிடலாம்!” எனவும் அவர் தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1