பரிஸ் : தீப்பிடித்து எரிந்த உணவகம்!
28 கார்த்திகை 2024 வியாழன் 18:45 | பார்வைகள் : 12001
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்று இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் தீ விபத்துக்குள்ளானது.
Rue du Départ வீதியும் Boulevard Edgar Quinet வீதியும் சந்திக்கும் முனையில் உள்ள Les Fauves எனும் உணவகமே தீப்பிடித்து எரிந்துள்ளது. உணவகத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டு அதில் இருந்து தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இருவர் இதில் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
60 வரையான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு தீ ஒருமணிநேரத்தில் 3.30 மணி அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan