எதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்!!
16 மாசி 2019 சனி 11:30 | பார்வைகள் : 21513
வருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்தனை பேரை தாங்கும் என தெரியுமா?
உலகில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் குவிவதால், ஒரே நேரத்தில் பல பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டி உள்ளது.
இதையெல்லாம் ஈஃபிள் கோபுரம் தாங்குமா.. என்றால்.. நீங்கள் எதிர்பார்க்காத அளவு சர்வசாதாரணமாக தாங்கும்.
முதலாவது தளம் ஒரே நேரத்தில் 3,000 பேர் தாங்கக்கூடியதாம். அதேவேளை, இரண்டாவது தளம் 1,600 பேரை தாங்குமாம்.

ஆச்சரியமாக மூன்றாவது தளம் ஒரே நேரத்தில் 400 பேரைத் தாங்குமாம்.
அப்படியென்றால்..??
அட.. ஆமாப்பா... மொத்தமாக ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்தில் ஈஃபிள் கோபுரத்தில் ஏறினால் எதுவும் ஆகாதாம் ஈஃபிளுக்கு.
சராசரியாக ஒருவர் 60 கிலோ என எடை கொண்டிருந்தாலும், மூன்று இலட்சம் கிலோ எடையைத் தாங்கும் இந்த ஈஃபிள்!
எதையும் தாங்கும் இதயம் தான் ஈஃபிள்!!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan