வெறும் 16 கிராம் எடையில் Casioவின் முதல் ஸ்மார்ட் ரிங் வாட்ச்
24 கார்த்திகை 2024 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 8860
பிரபல வாட்ச் நிறுவனமான Casio தனது முதல் ஸ்மார்ட் மோதிர வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.
Casio தமது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், தனது முதல் Smart ring stop watchஐ அறிமுகம் செய்துள்ளது.
மோதிர அளவிலான இந்த கடிகாரத்தின் எடை வெறும் 16 கிராம் தான். இது ஒரு அங்குல அளவு குறைவாக இருந்தாலும், 7 செக்மென்ட் LCD திரையைக் கொண்டுள்ளது.
மூன்று இயற்பியல் பொத்தான்களை கொண்ட இந்த வாட்ச் மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகளைக் காண்பிக்கும்.
இதில் திகதி அல்லது நேரத்தை வேறு நேர மண்டலத்தில் காண்பிக்கவும், Stop watch அம்சத்தை அணுகவும் முடியும்.
துருப்பிடிக்காத எஃகு பெசல்கள் கொண்ட சிறிய Case, இந்த ரிங் வாட்சை துருபிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். இதன் திரையில் light option வழங்கப்பட்டுள்ளதால் இரவில் சரியாக நேரத்தை காணலாம்.
இந்த வாட்சில் அலாரம் அடிக்கும்போது சப்தத்திற்கு பதில் திரையில் வெளிச்சம் மட்டும் அணைந்து அணைந்து எரியும்.
ஏனென்றால், இதில் speaker வசதி வழங்கப்படவில்லை. மாற்றக்கூடிய பேட்டரி இந்த ஸ்மார்ட் மோதிர வாட்ச்சில், 2 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மோதிர அளவு 20 மில்லி மீற்றர் ஆகும்.
இந்த வாட்ச் டிசம்பரில் 19,800 யென் (இந்திய விலையில் ரூ.10,810) விலைக்கு ஜப்பானில் விற்பனையாக உள்ளது.
அடுத்த மாதம் இந்த மோதிர ஸ்மார்ட் வாட்ச் உலகம் முழுவதும் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan