யாழில் அதிகாலையில் கோர விபத்து - மூவர் காயம்
18 மார்கழி 2024 புதன் 05:41 | பார்வைகள் : 4770
கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்ததாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தொன்றும், அதே திசையில் மரப்பலகைகளை ஏற்றியவாறு பயணித்த சிறிய ரக உழவு வண்டியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உழவு வண்டியின் ஓட்டுநரும், அதன் உதவியாளரும், பேருந்தின் நடத்துனருமே காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத அதேவேளை, கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan