அவகோடா பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?
16 மார்கழி 2024 திங்கள் 14:41 | பார்வைகள் : 4875
அவகாடோ பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருப்பதன் காரணமாக ஆரோக்கியமான ஒரு காலை உணவுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகிறது. பல்வேறு நன்மைகளை வழங்கும் இந்த அவகாடோ பழத்தை கொண்டு நம்முடைய நாளை ஆற்றலுடன் ஆரம்பிக்கலாம்.
ஆரோக்கியமான கொழுப்பின் சிறந்த மூலம்: அவகாடோ பழங்களில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அதிலும் குறிப்பாக 100 கிராம் அவகாடோ பழத்தில் 15 கிராம் ஓலிக் அமிலம் காணப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. மேலும், இந்த கொழுப்புகள் காலைப் பொழுதுக்கு தேவையான தொடர்ச்சியான ஆற்றலையும் உங்களுக்கு வழங்குகிறது.
நார்ச்சத்து நிறைந்தது: 100 கிராம் அவகாடோ பழத்தில் 7 கிராம் நார்ச்சத்து இருக்கும் காரணத்தால், மலம் எளிதில் வெளியேறுவதற்கு உதவி செய்வதோடு, செரிமான ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருகிறது. மேலும் நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி, உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களுக்கு அவகாடோ பழம் ஒரு சிறந்த காலை உணவாக அமைகிறது.
பொட்டாசியத்தின் நல்ல மூலம்: 100 கிராம் அவகாடோ பழத்தில் 485 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது வாழைப்பழங்களை விட அதிகமான அளவாகும். பொட்டாசியம் என்பது இரத்த அழுத்தத்தை சீராக்கவும், தசை வலியை தடுக்கவும், நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தவும் நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan