கற்பனைக் கொள்ளையன் Arsène Lupin !!
2 கார்த்திகை 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 21865
உலகத்தை கலக்கிய எத்தனையோ கொள்ளையர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த கொள்ளையர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவனில்லை Arsène Lupin!!
ஆனால் அவன் ஒரு உண்மையான 'ஆள்' இல்லை. கற்பனை கதாப்பாத்திரம்.

பிரெஞ்சு எழுத்தாளர் Maurice Leblanc உருவாக்கிய இந்த கதாப்பாத்திரம் அத்தனை புகழடைந்தது. 'ரோபின் ஹூட்' நன்மை செய்வதற்காக திருடனாக மாறிய ஒருவன் தான் இந்த Arsène Lupin.
1905 ஆம் ஆண்டு The Arrest of Arsène Lupin எனும் நாவலில் முதன் முறையாக இந்த கதாப்பாத்திரம் தோன்றியது. உண்மையான திருடன் ஒருவனை பற்றி எழுதுகிறார் போல என மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த கதாப்பாத்திரத்தின் மேல் அத்தனை 'விபரங்கள்' படைத்திருப்பார் எழுத்தாளர்.
இதுவரை 17 நாவல்களின் இந்த Arsène Lupin எனும் கொள்ளையன் பிரதான கதாப்பாத்திரமாக வந்திருந்தான். 39 சிறுகதைகளில் தலைகாட்டியுள்ளான்.
தவிர, மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் திரைப்படங்கள் என பல்வேறு கட்ட தளங்களில் இந்த கதாப்பாத்திரம் காட்சிக்கு விரிந்தது.
இக்கதாப்பாத்திரத்தினை மிக உச்சிக்கு கொண்டு சென்றது 813 எனும் ஒரு நாவல். அமெரிக்காவில் இந்த நாவல் திரைப்படமாக அதே பெயரில் எடுக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் படி, Arsène Lupin ஐ கைது செய்து பரிசில் உள்ள La Santé சிறையில் அடைப்பார்கள். எத்தனையோ நிஜ கொள்ளையர்களை சந்தித்த இந்த சிறைச்சாலை, இந்த கற்பனைக் கொள்ளையனையும் வரவேற்றுக்கொண்டது!!

🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan