Bic ரேசர்! - இது ஒரு பிரெஞ்சுத் தயாரிப்பு!!
22 கார்த்திகை 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 21161
மஞ்சள் நிற பின்னணியை கொண்டு கறுப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த Bic எனும் வார்த்தை, சாதாரண வார்த்தை இல்லை!!
இன்று உலகம் முழுவதும் (இலங்கை இந்தியா உட்பட..) கிடைக்கும் இந்த Bic ரேசர்... ஒரு பிரெஞ்சுத் தயாரிப்பு என்றால் நம்ப முடிகிறதா?
Société Bic எனும் நிறுவனத்தில் இருந்து பல தயாரிப்புக்கள் உலகம் முழுவதும் மிக பிரபலம். ஒவ்வொரு நாட்டுக்கும் எது தேவையோ, அதை ரயாரித்து விற்பனை செய்கிறது Bic.
இங்கே அருகே Clichy நகரில் உள்ளது இதன் தலைமையகம். சுமார் 73 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது எங்கிருந்து ஆரம்பித்ததோ, அங்கேயே இன்னமும் தலைமைச் செயலகம் உள்ளது.
Bic நிறுவனத்தின் மிக புகழ்பெற்ற தயாரிப்பு, பேனைகள். விதம் விதமாக இந்த பேனைகளை மிக தரமாக தயாரிக்கின்றது.

இந்த புகைப்படத்தில் தேசிய காவல்துறையினருக்கு சமர்ப்பணம் செய்வதற்காக தயாரித்துள்ள பேனையை காணலாம்.
இரண்டாவது மிக புகழ்பெற்ற தயாரிப்பு சிகரெட் லைட்டர். ஆடம்பர மற்றும் 'க்ளாஸிக்' வடிவமைப்பைக் கொண்ட இந்த லைட்டர்கள், இன்று பலருக்கு 'மலரும் நினைவுகள்'ளாக உள்ளது!!
Bic தயாரிப்புக்கள் வெறுமனே பயன்படுத்துவதற்கான பொருள் என்று இல்லாமல், அது ஒரு பிடித்தமான... உடன் இருக்கும் பொருளாக உள்ளதால், மனதுக்கு நெருக்கமாக உள்ளது.
இன்று பல தொழில்நுட்பங்களை பயன்டுத்தி பல நிறுவனங்கள் பொருட்களை தயாரிக்கின்றபோதும், Bic நிறுவனத்தின் தாரிப்புக்கள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதை அளப்பரியது.
சரி, "Bic" என்றால் என்ன அர்த்தம்? நாளை பார்க்கலாம்...!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan