வரிகளை அதிகரிக்கச் சொல்லும் சிறப்புச் சட்டம் - நாளை சமர்ப்பிப்பு!!
.jpg)
10 மார்கழி 2024 செவ்வாய் 12:21 | பார்வைகள் : 11742
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அதனை எதிர்கட்சிகள் இணைந்து நிறைவேற்ற விடாமல், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து அரசாங்கத்தை கவிழ்ந்திருந்தன.
இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், 'சிறப்புச் சட்டம்' (loi spéciale) ஒன்றை நாளை புதன்கிழமை ஜனாதிபதி தரப்பில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
இந்த சிறப்புச் சட்டத்தில், ஜனவரி 1 ஆம் திகதி முதல் வரி அதிகரிப்புக்கான தரவுகள் இருப்பதாகவும், நாளை டிசம்பர் 11 ஆம் திகதி இடம்பெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் (conseil des ministres) அது தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் Michel Barnier கொண்டுவந்திருந்த வரி அதிகரிப்பு மாற்றங்களையே இந்த சிறப்புச் சட்டமும் சொல்வதாகவும், அதனை தற்காலிகமாக அரசு நிறைவேற்ற உள்ளதாகவும், பிரதமரின் அறிவிப்பின் பின்னர் அதனை வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க உள்ளதாகவும் அறிய முடிகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1