விசேட செய்தி : குழந்தை கடத்தல்.. நெதர்லாந்தில் வைத்து பாதுகாப்பாக மீட்பு!

26 ஐப்பசி 2024 சனி 06:37 | பார்வைகள் : 9383
Santiago எனும் 18 மாத குழைந்த கடத்தப்பட்டு, தேடப்பட்டு வந்த நிலையில், நெதர்லாந்தில் (Pays-Bas) வைத்து மீட்கப்பட்டுள்ளது. குழந்தை ‘நலமாக’ இருப்பதாக அறிய முடிகிறது.
ஒக்டோபர் 25, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி அளவில் Amsterdam நகரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் வைத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். நெதர்லாந்து காவல்துறையினரும், பிரெஞ்சு காவல்துறையினரும் இணைந்து இந்த தேடுதல் பணியை மேற்கொண்டிருந்தனர்.
முன்னதாக பிரான்சில் இருந்து பெல்ஜியத்துக்கு தப்பிச் சென்று, பின்னர் அங்கிருந்து நெதர்லாந்துக்குச் சென்றதாக அறிய முடிகிறது.
Santiago எனும் குறித்த குழந்தை மருத்துவ பராமரிப்புக்கு உட்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டு Robert-Ballanger மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையினை பெற்றோர்களே கடத்தியிருந்தனர். குழந்தை கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி 32 வாரத்தில் குறைப் பிரசவமாக பிறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1