இலங்கையில் நேற்று முதல் புதிய கடவுச்சீட்டு அறிமுகம்
22 ஐப்பசி 2024 செவ்வாய் 06:56 | பார்வைகள் : 5731
இலங்கையில் புதிய வகை கடவுச்சீட்டுக்கள் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தோற்றத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட ‘P’ தொடர் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது. மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன.

முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்தநிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ தலதா மாளிகை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொழும்பு தாமரை கோபுரம், வரலாற்று சிறப்புமிக்க காலி டச்சு கோட்டை சுவர், பொலன்னறுவை வரலாற்று இடங்கள், ரிட்டிபன்ன மீன்பிடி தொழில் அரக்கு நைனிவியா பாலம், சீகிரியா, தேயிலை தோட்டம், இறப்பர் வெட்டு மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவது வழமையாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan