Arc de Triomphe இல் ரகசிய அருங்காட்சியகம்..!!

1 தை 2020 புதன் 10:30 | பார்வைகள் : 22596
பரிசில் உள்ள Arc de Triomphe நெப்பிலியன் வளைவு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. புற மாவட்டங்களில் வசிக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இதனை ஒருதடவை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
பரிசின் மொத்த அழகையும் கழுகு பார்வையில் பார்ப்பதற்கு ஈஃபிள் கோபுரத்துக்கு அடுத்ததாக இந்த நெப்போலியன் வளைவு உதவுகின்றது.
சரி, இந்த கட்டிடத்தில் ஒரு ரகசிய அருங்காட்சியகம் உள்ளது உங்களுக்கு தெரியுமா.?!
இந்த நெப்போலியன் வளை கட்டுவதற்கு திட்டமிடப்பட்ட காலத்தில் இருந்து, இதன் கட்டுமானப்பணிகள் காலம் வரை மிக பொக்கிஷமான நினைவுகளை புகைப்படங்களாக இங்கு சேமித்து வைத்துள்ளனர்.
கட்டிடத்தின் உச்சியில் ஏறு ஆர்வத்தில் நாம் அதனை பார்ப்பதற்கே மறந்துவிடுகின்றோம்.
தவிர, படிக்கட்டில் ஏறுவது கூட ஒரு சிரமான காரியமாக உள்ளதால் இதனை விடுத்து, மின் தூக்கியில் நேரே மேலே சென்றுவிடுகின்றோம்.
காணக்கிடைக்காத அரிய புகைப்படங்களை தொகுத்து வைத்துள்ளனர். அடுத்த முறை இங்கு செல்லும் போது இதன் வரலாற்றை தெரிந்துகொள்வதற்காகவேனும் இந்த அருங்காட்சியக தொகுப்பை பார்வையிட்டுச் செல்லுங்கள்.
Champs Élysées மற்றும் Avenue de la Grande Armée இல் இருந்து இரண்டு சுரங்கங்கள் இந்த நெப்போலியன் வளைவை வந்தடைகின்றன. நெருக்கடியான போக்குவரத்து நேரங்களில் இந்த சுரங்கத்தை பயன்படுத்தலாம்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1