Audi நிறுவனம் வெளியிட்ட மின்சார சைக்கிள்....
19 ஐப்பசி 2024 சனி 17:33 | பார்வைகள் : 4904
ரூ.30 லட்சம் மதிப்பில் மின்சார சைக்கிள் ஒன்றை Audi கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Audi நிறுவனம் அதன் Luxury Car தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் இப்போது மின்சார மலைப்பயண சைக்கிள் (eMTB) துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
Dakar பந்தயத்தில் வெற்றி பெற்ற RS Q e-tron ரேஸ்காரின் வடிவமைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பிரீமியம் மின்சார சைக்கிள், கோரமான மலைப்பாதைகளையும் எளிதில் கடக்கக் கூடியது.
இந்த எலெக்ட்ரிக் மலைப்பயண சைக்கிளின் விலை வரி சேர்க்காமல் 9,795 அமெரிக்க டொலர்கள் ஆகும். அதாவது இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 30 லட்சம் ஆகும்.
2024 கோடை காலத்தில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இதன் பிரத்யேக மொடல், ஆடியின் தரத்துடன் இணைந்த ஒழுங்கான வடிவமைப்பை வழங்குகிறது.
720-Wh லித்தியம் அயான் பேட்டரி மூலம், பயண முறையைப் பொறுத்து 12 முதல் 90 மைல் வரை பயணிக்க முடியும்.
Brose S-MAG 250-வாட் மோட்டார் மூலம் 90 Nm டார்க் வழங்கப்படும், மேலும் சருக்கலான மலைப்பாதைகளில் கூட உங்களைத் தூக்கி செல்லும் திறன் கொண்டது.
சாய்வு மற்றும் மலைப்பாதைகள் உட்பட எந்த இடத்திலும் மிருதுவான பயணத்தை உறுதிசெய்ய, இந்த மாடலில் Öhlins TTX22m.2 ரியர் ஷாக் மற்றும் RXF38 m.2 ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டுள்ளது.
மின்சார உதவிக்கான நான்கு நிலைகள் (Eco, Tour, Sport, Boost) வழங்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்கள் தேவைக்கேற்ப வேகத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த eMTB சைக்கிளின் முன்னால் 29-அங்குலம் மற்றும் பின்னால் 27.5-அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் SRAM GX Eagle 1x12 டிரைவ் சிஸ்டம் மற்றும் F.I.R.S.T. பிரேக்கிங் சிஸ்டம் உள்ளதால் வேகக் கட்டுப்பாட்டை உறுதிசெய்கிறது.
ஆடி, 2025க்குள் அதன் 30% வாகனங்களை மின்சாரமாக மாற்றும் திட்டத்தையும், 2050க்குள் சர்வதேச கார்பன் நடுநிலைக்குத் தங்கள் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஆடியின் இந்த மின்சார மலைப்பயண சைக்கிள் விலையுயர்ந்தாக இருந்தாலும், பிரீமியம் பயண அனுபவத்தை விரும்பும் சிலருக்குப் பெரும் ஈர்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan