இலங்கையில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகள் குறித்து எச்சரிக்கை
19 ஐப்பசி 2024 சனி 10:30 | பார்வைகள் : 5331
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு மேலும் தெரிவிக்கையில்,
இந்த கிரீம் வகைகளை தயாரிப்பதற்கு அதிகபட்சமான கனரக உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் தோல் மிகவும் மென்மையாதல், தோல் புற்றுநோய் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிரீம் வகைகளில் ஒரு கிலோ கிராமுக்கு ஒரு மில்லிகிராம் பாதரசமே பயன்படுத்த வேண்டும். ஆனால், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan