கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார்: நம்பிக்கையுடன் சொல்கிறார் உதயநிதி

16 ஐப்பசி 2024 புதன் 06:28 | பார்வைகள் : 5651
அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் வரை அனைவரும் களத்தில் இறங்கி, பணிகளை மேற்கொண்டுள்ளனர். கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று முன்தினம், நேற்று சென்னையில் கனமழை பெய்தது. அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள் கவுன்சிலர்கள் வரை களத்தில் இறங்கி, அனைத்து விதமான பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இப்போது மழை லேசாகத்தான் பெய்துள்ளது. கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. கனமழையில் கூட சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை தான். இவ்வாறு உதயநிதி கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1