தியாகம் செய்வதில் முதன்மையானவர் தாயா தந்தையா??
13 ஐப்பசி 2024 ஞாயிறு 14:08 | பார்வைகள் : 4926
ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கடினப்பட்டு தியாகம் செய்தது நீங்களா…? அல்லது அப்பாவா…? என்று.
அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கடினமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.
உங்க அப்பா என்னை திருமணம் செய்து கொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்.
நீங்கள் ஒவ்வொருவராக பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக, உணவு, உடை, நலம் மற்றும் உங்கள்
உயர்வுக்கு கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார்.நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வையால் கடினஉழைப்பால் உருவானவர்கள்.
மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டார்.அவரின் பதில் இந்த மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு துயர் அடைந்தாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை.
அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் ஓயாத உழைப்பு தான் இந்த குடும்பத்தை/உங்களை இன்று இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.
என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன்அடிக்கடி வாதம் செய்தாள்..அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லைநான் எப்படியோ பரவாயில்லை, அவளின் நிறைவு காலத்திலாவது அவளுக்கு ஏதாவது விருப்பம் இருக்கலாம். ஆனால் என்னிடம் கூட கேட்டது கிடையாது
நீங்கள் எல்லோரும் நிறைவேற்றுவீர்கள் எனநம்புகிறேன் என்றார்.மகன் தனது சகோதர/சகோதரிகளிடம் சொன்னான். நம்மைவிட இந்த உலகில் பாக்கியசாலிகள் யாரும் இருக்க முடியாது.
தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும்,தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.
பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்,
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan