இயக்குனர் சுரேஷ் சங்கையா மரணம்!
16 கார்த்திகை 2024 சனி 08:46 | பார்வைகள் : 4552
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் 41 வயதில் காலமான நிலையில், கோலிவுட் திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றது.
'காக்கா முட்டை' போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா என்பவர், 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை அடுத்து அவர் பிரேம்ஜி அமரன் நடிப்பில் உருவான 'சத்திய சோதனை' என்ற படத்தை இயக்கினார். தற்போது, அவர் யோகி பாபு நடித்து வரும் 'கெணத்த காணோம்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், திடீரென நேற்றிரவு அவர் காலமானார். அவரது மறைவு கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டு படங்களை இயக்கிய சங்கையா மூன்றாவது படம் இயக்கிய நிலையில், அது ரிலீஸ் ஆகும் முன்னரே காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சங்கையா இயக்கி வந்த 'கெணத்த காணோம்' என்ற படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் மரியான் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒட்டியடிகள் இந்த படம் நேரடியாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இயக்குனர் சங்கையா சிகிச்சை பெற்று வந்த நிலையில், கல்லீரல் பாதிப்படைந்ததால் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி காலமாகியதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த சங்கையாவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan