Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய எரிவாயு கப்பல்கள் தொடர்பில் ஜெர்மனி விடுத்துள்ள  எச்சரிக்கை

ரஷ்ய எரிவாயு கப்பல்கள் தொடர்பில் ஜெர்மனி விடுத்துள்ள  எச்சரிக்கை

15 கார்த்திகை 2024 வெள்ளி 06:34 | பார்வைகள் : 5124


ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு துறைமுகங்களை பயன்படுத்த அரசாங்க எரிவாயு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜெர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஜேர்மனி அரசாங்கத்தின் Deutsche எரிசக்தி நிறுவனம் கண்டிப்பாக ரஷ்ய எரிவாயு இறக்குமதியை அனுமதிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

Brunsbuttel பகுதியில் அமைந்துள்ள இறக்குமதி முனையத்தில் ரஷ்ய எரிவாயு கப்பல் ஒன்றை அனுமதிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ள நிலையிலேயே ஜேர்மனி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களின் நலன் கருதியே அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அமைச்சகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக அறிவிப்பு வெளியாகும் வரையில், ரஷ்ய கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ட்ரம்ப் ஆகியோருடன் இணக்கமான போக்கை முன்னெடுக்கும் வகையிலேயே ரஷ்யா எரிவாயு கப்பலை ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா முன்வைத்த ஆலோசனை ஒன்றில், இனி ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யலாம் என குறிப்பிட்டதை அடுத்தே ரஷ்யாவின் இந்த நடவடிக்கை.

2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னர், ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்த நாடு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்