பிரான்ஸ் - இஸ்ரேல் உதைபந்தாட்ட போட்டி.. ஜனாதிபதி மக்ரோன் பங்கேற்கிறார்..!!

11 கார்த்திகை 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 8335
பிரான்ஸ் - இஸ்ரேல் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியினை பார்வையிட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் செல்கிறார்.
Stade de France அரங்கில் இந்த போட்டி வரும் நவம்பர் 14, வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. 'அதிக ஆபத்தான' சூழ்நிலையில் இந்த போட்டி இடம்பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தில் இடம்பெற்ற கலவரம் போன்று இங்கும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டி இடம்பெறும் இடம், திகதியில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாமல் போட்டி திட்டமிட்டபடி இடம்பெற உள்ளது.
இந்த போட்டியினைக் காண ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் செல்கிறார். எலிசே மாளிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1