தென்கொரியாவில் படகு விபத்து -இருவர் உயிரிழப்பு
8 கார்த்திகை 2024 வெள்ளி 16:18 | பார்வைகள் : 6302
தென் கொரியாவில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவின் தெற்கு தீவான ஜெஜு (Jeju) இன் கரையில் இருந்து 24 கி.மீ (14.9 மைல்) தொலைவில் உள்ள கடற்பரப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சியோலை தளமாகக் கொண்ட யோன்ஹாப் செய்திச் சேவை கூறியுள்ளது.
129 டன் எடையுள்ள Geumseong படகில் 16 தென் கொரியர்கள், 11 வெளிநாட்டவர்கள் உட்பட 27 பணியாளர்கள் இருந்ததாக கடலோர காவல்படை குறிப்பிட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan