Rédoine Faïd - மாயாவி..!! (இறுதி அத்தியாயம்)
12 ஆடி 2019 வெள்ளி 11:33 | பார்வைகள் : 21816
அன்றைய நாள், வடக்கு பிரான்சின் Creil நகரில் Rédoine Faïd க்கு விடிந்தது. அது ஒன்றும் அவனுக்கு அற்புதமான நாள் இல்லை.
கடந்த மூன்று மாத கால தொடர் ஓட்டத்தினால் அவன் மிகவும் களைத்து, உடல் மெலிந்து பல துரோகங்களால் சூழ்ந்திருந்தான்.
அவனின் இருப்பிடத்தை அறிந்த காவல்துறையினர், அவன் தூங்கி எழும்பும் வரை அமைதியாக வீட்டினை சுற்றி வளைத்து காத்திருந்தனர். அதேவேளயில், அவனது இரு சகோதர்களையும் அதேபோன்று சுற்றி வளைத்தனர்.
Rédoine Faïd எழுந்து, சோம்பலை முறித்து கண்களை திறக்க, காட்சி மாறுகின்றது.
அதிரடியாக பாய்ந்த காவல்துறை அதிகாரிகள், அவனை ஆயுத முனையில் கைது செய்கின்றனர். அதே நேரத்தில் அவனது இரு சகோதர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
அன்று ஒக்டோபர் 3, 2018.
சினிமாக்களால் வசீகரிக்கப்பட்டு தவறான பாதைக்குச் சென்ற Rédoine Faïd தன்னை ஒரு 'சூப்பர் ஹீரோ' என எண்ணியிருக்கின்றான். ஆனால் அவன் சட்டத்தை பொறுத்தவரையில் ஒரு வில்லனே.
தற்போது சிறையில் அடைக்கபப்ட்டுள்ள அவன், மீண்டும் மாயமாகக்கூடும் என எண்ணப்படுவதால் இந்த மாயாவியின் பாதுகாப்பு தினமும் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.
முற்றும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan