யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் மரணம்
7 கார்த்திகை 2024 வியாழன் 15:52 | பார்வைகள் : 5078
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது - 35) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன் தனது வாகனத்தில் நித்திரையில் இருந்தபோது குளவி கொட்டியுள்ளது. வலி தாங்கமுடியாமல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல்கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan