இந்தியாவில் YouTube Shopping அறிமுகம்., creators-க்கு கூடும் வருவாய்
5 கார்த்திகை 2024 செவ்வாய் 08:26 | பார்வைகள் : 3701
YouTube நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஷாப்பிங் இணைப்பு திட்டத்தை (shopping affiliate program) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பிரபல நிறுவனங்களான Flipkart, Myntra போன்றவற்றின் பொருட்களை, YouTube உள்ளே நின்று creators தங்களின் வீடியோக்களில், Shorts மற்றும் live streams-ல் குறிக்கலாம் மற்றும் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும்.
இந்த திட்டம் மூலம் பயனர்கள் தங்கள் பிரியமான YouTubers பரிந்துரைக்கும் பொருட்களை தளத்தை விட்டு வெளியே செல்லாமல் நேரடியாக வாங்க முடியும்.
இது creators-க்கு விளம்பர வருவாய்க்கு அப்பால் கூடுதல் வருவாய் பெற உதவுகிறது.
Flipkart Group மூத்த துணைத் தலைவர் ரவி ஐயர், இந்த திட்டம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார். YouTube-ல் creators மூலம் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்தப் பொருட்களை ஆராய்வதில் வாடிக்கையாளர்களின் ஈர்ப்பைப் பெருக்கும் என்று கூறினார்.
YouTube Studio-ல் தகுதியான creators-க்கு இந்த திட்டம் அனுமதி அளிக்கப்படுகிறது, மேலும் வீடியோவில் பொருட்களை tag செய்து விளம்பரம் செய்வது எளிதாகிறது.
தற்போது 65% இந்தியர்கள் creators பரிந்துரைகளைச் சராசரி விளம்பரங்களைவிட அதிகம் நம்புகின்றனர் என கூறப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan