ChatGPT-யில் கூடுதலாக தேடுபொறியை அறிமுகம்! Google-க்கு போட்டியாக களமிறங்கும் OpenAI
2 கார்த்திகை 2024 சனி 11:11 | பார்வைகள் : 4291
OpenAI நிறுவனத்தின் ChatGPT-யில் கூடுதலாக தேடுபொறி (Search Engine) அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற AI சாட்பாட்டான ChatGPT-யை உருவாக்கிய புதுமையான தொழில்நுட்ப நிறுவனமான OpenAI தனது தளத்தில் சக்திவாய்ந்த தேடுபொறிக் கருவிகளை ஒருங்கிணைத்து, ஒரு முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மேம்படுத்துதல் இணையதள தேடலில் கூகுளின் நீண்டகால ஆதிக்கத்துக்கு சவால் விடும் விதமாக இந்த மேம்படுத்துதல் மூலம் ChatGPT தன்னை வலைத் தேடலில் சக்திவாய்ந்த போட்டியாளராக நிலைநிறுத்தியுள்ளது.
இந்த மேம்பாட்டின் மூலம், ChatGPT பயனர்கள் தங்கள் கேள்விகளுக்கு விரைவான மற்றும் துல்லியமான பதில்களைப் பெறலாம்.
மேலும் இது தொடர்புடைய வலை ஆதாரங்களுடன் நேரடியாக இணைக்கப்படும்.
OpenAI CEO சாம் ஆல்ட்மேன், தேடுபொறி அம்சத்தின் மீதான தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார், அதில் இதை தனது தனிப்பட்ட விருப்பமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் AI சாட்பாட் தற்போது முக்கிய செய்திகள் முதல் நேரடி விளையாட்டு தகவல்கள் வரையிலான பல்வேறு தலைப்புகளில் தற்போதைய தகவல்களையும் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan