பரிசில் ஓர் இரட்டைக் கோபுரம்!
17 புரட்டாசி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 24198
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரங்கள் உலகப் புகழ்பெற்றவை. அதைப் பின்பற்றி பரிசிலும் இரட்டைக் கோபுரங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டு, 1975 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டவை தான், Bagnolet நகரிலே இருக்கும் Les Mercuriales எனப்படும் இரண்டு கோபுரங்கள் ஆகும்.
பரிசின் 20 ஆம் வட்டாரத்துக்கு மிக அருகில், A3 நெடுஞ்சாலையை ஒட்டி, வானளாவ உயர்ந்து நிற்கின்றன இந்த ‘மாற்றான்’கள்.
கிழக்குப் பகுதியில் இருப்பவரின் பெயர் Levant ஆகும். மேற்குப் பகுதியில் இருப்பவரின் பெயர் Ponant.
அலுவலகங்கள் மற்றும் வியாபாரம் தொடர்புடைய களஞ்சியங்களைக் கொண்ட 33 மாடிகளை உடைய இந்த இரட்டைக்கோபுரங்கள், வெளியே இருந்து பார்க்கும் போது சாதாரண கட்டிடம் போலத் தெரிந்தாலும், உள்ளே நுழைந்தீர்கள் என்றால், தலை சுற்றும்.
தரைத் தளத்தில் இருந்து கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல பாரிய மின் தூக்கிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். அது ஆட்கள் ஏறிச் செல்லும் சாதாரண மின் தூக்கிகள் அல்ல. பெரும் வாகனங்கள், பொதிகளைச் சுமந்துகொண்டு அப்படியே அலேக்காக கோபுரத்தின் உச்சியில் இருக்கும் களஞ்சியப் பகுதிக்குச் செல்லும் பாரிய மின் தூக்கிகள் ஆகும்.
மிக மிக உறுதியான கட்டிடமாக இவை உள்ளன. பெரும் பொருட்செலவில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடங்கள் இன்றும் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் அழகுடன் மிளிர்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan